News August 17, 2025
இல.கணேசன் இடத்துக்கு அஜய் குமார் பல்லா

நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் சேர்த்து வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
Similar News
News August 17, 2025
கவர்னர் R.N.ரவியை மாற்றக் கூடாது.. ஸ்டாலின்

தமிழ்தாய் வாழ்த்தை மதிக்காத R.N.ரவி, மிகவும் மலிவான அரசியல் செய்வதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் கவர்னர் கம்பு சுத்தலாம், தமிழ்நாட்டில் கம்பு சுத்த கூடாது எனக் கூறிய அவர், R.N.ரவி தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும், அப்போதுதான் தமிழ், தமிழகத்தை பற்றி அறிந்து கொள்வார் எனத் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு எதிராக சிலர் அவதூறுகளை அள்ளி வீசுவதாகவும் சாடினார்
News August 17, 2025
ராமதாஸே பாமக தலைவர்: தீர்மானம் நிறைவேற்றம்

ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முதல் தீர்மானமாக, ராமதாஸே கட்சியின் நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவார் என கட்சியின் கெளரவத் தலைவர் GK மணி தெரிவித்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகளுக்கு இங்கே <<17432551>>கிளிக் <<>>செய்யவும்.
பதில்கள்:
1. ஹைட்ரஜன்
2. ஹரியானா
3. பி.வி.சிந்து (24 வயது)
4. முகாரி
5. சட்டை