News August 17, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்- மங்களூரு சென்ட்ரல் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் நாளை (ஆக.17) கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது. எனினும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.
Similar News
News August 17, 2025
சேலம்: 500 வங்கி அதிகாரி காலியிடங்கள்!

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், இந்த லிங்கை<
News August 17, 2025
25,747 விவசாயிகளுக்கு ரூ.244 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 25,747 விவசாயிகளுக்கு ரூபாய் 244 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்களையும் பெற்று பயனடையலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News August 17, 2025
சேலம் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். clip.tn.gov.in என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.