News April 7, 2024
பாஜகவுக்கு தென்னிந்தியா மரண அடி கொடுக்கும்

மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியா இந்த முறையும் பாஜகவுக்கு மரண அடி கொடுக்குமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், அதிமுக தான் முதன்மையான எதிரி. பாஜக சித்தாந்த எதிரி. அரசியலமைப்பை காப்பாற்றுவது, பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது தான் தங்களது நோக்கம் என்றும், பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பாஜகவுக்கு கூட நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. முதல்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பெண்மணி யார்?
2. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை கொண்டது?
3. சுப்பிரமணிய பாரதியார் எப்போது சென்னையில் சுயராஜ்ய நாளை கொண்டாடினார்?
4. செஸ் விளையாட்டை கண்டுபிடித்த நாடு எது?
5. நிலவு இல்லாத கோள்கள் எவை?
பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 12, 2025
மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்: விஜய்

‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற கருத்தை முன்வைத்து ஆக.21-ல் மதுரையில் மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்; நாம் மாற்று சக்தி அல்ல; முதன்மை சக்தி என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் எனக் கூறியுள்ள அவர், மதுரை மாநாட்டில் கொள்கை எதிரி, அரசியல் எதிரியை சமரசமின்றி எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
கூலி பீவர்.. ₹4,500க்கு விற்பனையாகும் FDFS டிக்கெட்!

வரும் 14-ம் தேதி வெளியாக இருக்கும் ‘கூலி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள், மாநிலம் கடந்து சென்று கள்ள சந்தையில் பல ஆயிரங்களை செலவு செய்து டிக்கெட் வாங்கியுள்ளனர். சென்னையின் பல முக்கிய திரையரங்குகளில் கள்ளச் சந்தையில் ₹4,500-க்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீங்க டிக்கெட் வாங்கியாச்சா?