News August 16, 2025
சேலம்: ரூ..1 லட்சம் சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி!

சேலம் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News March 11, 2026
சேலத்தில் அடிதடி தகராறு: 17 பேர் மீது வழக்கு

சேலம் கல்பகனூரில் திருவிழா விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் வசூலில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த நிதீஷ் குமார் தரப்பினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பையும் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News March 11, 2026
சேலம்: எம்எல்ஏ அருள் அதிரடி எச்சரிக்கை!

சேலம் ஓமலூர் கோட்டக்கவுண்டம்பட்டியில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக் கோரி பாமக எம்.எல்.ஏ அருள் வலியுறுத்தியுள்ளார். வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் கடை மூடப்படாவிட்டால், அன்றைய தினம் காலை 11 மணிக்குத் தாமே நேரில் வந்து கடையைப் பூட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
News March 11, 2026
சேலம்: Spam Calls தொல்லையா?.. இதற்கு இனி END CARD!

சேலம் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.


