News April 7, 2024
உடல் எடையை குறைக்க சில வழிமுறைகள்

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் சூடான நீரில் தேன் கலந்து பருகலாம். தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடிந்தால் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது சிறப்பு. கொழுப்புச் சத்து நிறைந்த உணவைத் தவிர்த்து புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடலாம். இரவு உணவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முறையான தூக்கம் மிக அவசியம்.
Similar News
News March 22, 2026
ஆட்சியில் பங்கு கேட்கிறதா பாஜக? தமிழிசை

அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தால், பாஜக அதிகாரத்தில் பங்கு கேட்கும் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய தமிழிசை, கூட்டணி ஆட்சி பற்றி தற்போது எந்த கருத்தும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். அதேநேரம், தேர்தல் முடிவைப் பொறுத்து அது அமையும் என்றும் அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இது அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 22, 2026
35 வருடமாக ராமதாஸ் போட்டியிடாதது ஏன்?

ஒருவழியாக புதிதாக கட்சியில் இணைந்த சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துவிட்டார். ஆனால், அவர் போட்டியிடமாட்டார். இப்போது மட்டுமல்ல, 1991-ல் பாமகவை தொடங்கியது முதலே அவர் போட்டியிட்டதில்லை. தான் போட்டியிடமாட்டேன், தனது கட்சியாளர்களை தேர்தல் அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இதுவரை ராமதாஸ் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
News March 22, 2026
நாளை முதல் உயர்கிறது.. மத்திய அரசு அறிவிப்பு

உள்நாட்டு விமான <<16963935>>கட்டணங்களுக்கான <<>>உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை காரணம் காட்டி, ஏற்கெனவே சில விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஏற்றியுள்ளன. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கும் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விமான பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


