News August 16, 2025
தேனி: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <
Similar News
News March 8, 2026
தேனி: வெற்றியை நிர்ணயிக்கும் இளம் வாக்காளர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும், 18 முதல் 19 வயது உட்பட்ட 19,259 இளம் வாக்காளர்கள் உள்ளனர் அதேபோல் 20 வயது முதல் 29 வயது உட்பட்ட 1,87,753 வாக்காளர்களும், அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட 2,02 ,188 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 8, 2026
தேனி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

அம்மச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் ஜெயஸ்ரீ (19) இளங்கோவனின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்து சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த ஜெயஸ்ரீ நேற்று (மார்.7) வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 8, 2026
தேனி: வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழப்பு.!

கோம்பை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜா (38). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வலிப்பு நோய் இருந்து வந்த நிலையில், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (மார்ச்.6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


