News August 16, 2025
கடந்தாண்டு +1-ல் பெயில் ஆன மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

நடப்பாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்றாலும், 2024 – 25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது, கடந்தாண்டு எழுதியவர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 21, 2026
நடிகர் அஜித் திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் அஜித்தின் புதிய முடிவு, அவரது ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது. ‘அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் LLC’ என்ற பெயரில் பிலிம் சேம்பரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் பதிவு செய்துள்ளார். அஜித் தயாரிப்பாளர் ஆகிவிட்டால், இனி படங்களில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருப்பதே ரசிகர்களின் கலக்கத்திற்கு காரணம். தற்போதுவரை அஜித்தின் புதிய பட அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 21, 2026
₹21,000 சம்பளம்.. 827 பணியிடங்கள்

மத்திய காவல்படையில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கான அறிவிப்பை SSB வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் நிலை பணிகளுக்கு (டிரைவர், வெயிட்டர் உள்பட 11 பிரிவுகளுக்கு) 10-ம் வகுப்பு தகுதியும், 1 ஆண்டு துறைசார்ந்த அனுபவமும் தேவை. சம்பளம் : ₹21,700-₹69,100. உடற்தகுதி, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு இந்த <
News March 21, 2026
BREAKING: விலகுவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின் பேட்டியளித்த TTV தினகரன், வரும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷாவை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்த அவர், பிஹாரில் NDA ஒற்றுமையாக செயல்பட்டு வென்றதை போல தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவது பற்றி ஆலோசித்ததாக குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு செல்வது தவறில்லை எனவும் TTV தினகரன் தெரிவித்தார்.


