News August 16, 2025
திண்டுக்கல்லில் இலவசம்: உடனே APPLY பண்ணுங்க!

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <
Similar News
News March 4, 2026
திண்டுக்கல்லில் தட்டித்தூக்கிய அமைச்சர்!

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியம், கரியாம்பட்டி ஊராட்சி அம்மாபட்டியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர், தங்களது கட்சியில் இருந்து விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.சி.தங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
News March 4, 2026
திண்டுக்கல்லில் உச்சகட்ட பாதுகாப்பு!

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இஸ்ரேலில் இருந்து பலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நிலையில், தற்போதைய வளைகுடா போர் சூழலால் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News March 4, 2026
திண்டுக்கல் மக்களே உஷார்; காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனுமதியில்லாத லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வகை செயலிகள் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளை அணுகி பாதுகாப்பாக கடன் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


