News August 16, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News August 17, 2025
நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (17-08-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 95-க்கும், முட்டை கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.97-ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.4.90- ஆகவும் நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
News August 17, 2025
நாமக்கல்: வங்கி அதிகாரி வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க!

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், இந்த <
News August 17, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலை திடீரென சரிவு

நாமக்கல் மண்டலத்தில் நேற்று மாலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலை 4.90 காசுகளாகவும், ஒரு கிலோ முட்டை கோழி 97 ரூபாய்க்கும், கறிக்கோழி ஒரு கிலோ 95 ரூபாய்க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என கோழி பண்ணையாளர்கள் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.