News August 16, 2025
தங்கம் வென்றார் இந்தியாவின் அங்கிதா தியானி

Grand Slam Jerusalem 2025 போட்டிகள் இஸ்ரேலில் நடைபெற்று வருகின்றன. இதில் Steeplechase 2,000 பந்தயத்தில், இந்தியாவின் அங்கிதா தியானி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த இலக்கை அவர் 6:13:92 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பருல் சவுத்ரியின் முந்தைய சாதனையை (6:14:38) அங்கிதா முறியடித்துள்ளார். ஆசிய அளவில் இரண்டாவது வேகமான ஓட்டம் இதுவாகும். இவருக்கு வாழ்த்து கூறலாமே..
Similar News
News August 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 17, 2025
நான் இருக்கிறேன்.. BCCI-க்கு சாம்சன் அனுப்பிய செய்தி!

ஆசிய கோப்பை நெருங்கி வரும் நிலையில், அணியில் இடம்பெறுவோமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், சஞ்சு சாம்சன் ஒரு செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் டி20 போட்டியில் அரைசதம் அடித்து, KCA செயலாளர் லெவன் அணிக்கு வெற்றிக்கு உதவியுள்ளார். 36 பந்துகளில் 54 ரன்களை விளாசி, தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் எனும் செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.
News August 17, 2025
அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.