News August 16, 2025

திருவள்ளூர்: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

image

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (ஆக.16) காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாலா என்பவரை செவிலியர் மீரா, கன்னத்தில் அறைந்துள்ளார். மருத்துவர் அறையை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக செவிலியர் மீரா அறைந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்காக தான் இந்த செய்தி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

திருவள்ளூரின் முதல் ரயில் சேவை எது தெரியுமா?

image

தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை 1856ம் ஆண்டு ராயபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு இயக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து இரண்டாவது ரயில் திருவள்ளூருக்கு இயக்கப்பட்டது. முதலில் இயக்கப்பட்டு இருந்தால், தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை இயக்கப்பட்ட பெருமை திருவள்ளூருக்கு கிடைத்திருக்கும். தற்போதும் இரண்டாவது ரயில் சேவை, திருவள்ளூரின் முதல் ரயில்சேவை என்ற பெருமை உள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

திருவள்ளூர் இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி & ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். திருவள்ளூரில் உள்ளவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!