News August 16, 2025

நெல்லை 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சுதந்திர தினத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 145 நிறுவனங்களை தொழிலாளர் துறை ஆய்வு செய்ததில், 70 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News

News August 17, 2025

முதல்வர் விளையாட்டு போட்டி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சக்கரவர்த்தி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 2025-26 முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்பத்திற்கு ஆகஸ்ட் 20, மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் https://cmtrophy.sdat.in அல்லது https://sdat.tn.gov.inல் விண்ணப்பியுங்க.

News August 16, 2025

நெல்லை: இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று(ஆக.16) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 16, 2025

நெல்லை அரசு பள்ளி மாணவி விமான பயணம்

image

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி சபரி சந்தியாவும், அவருடன் ஆசிரியை நாலாயிரமும் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் எம்பி சவுந்தராஜன் ஏற்பாட்டில் விமானத்தில் 2 நாள் சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டனர். முதலிடம் பெற்ற மாணவி சபரி சந்தியா முதன்முதலாக விமானத்தில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது .

error: Content is protected !!