News April 7, 2024

ஈரோட்டில் வெப்பம் 42 டிகிரி செல்சியஸை தொட்டது

image

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் வெப்பநிலை 42 டிகிரியை தொட்டது. மொத்தம் 10 நகரங்களில் வெப்பம் 40 டிகிரிக்கு மேல் பதிவானது. தர்மபுரி 40.7 டிகிரி, கரூர் பரமத்தி 40 டிகிரி, நாமக்கல் 41 டிகிரி, சேலம் 41.6 டிகிரி, தஞ்சாவூர் 40 டிகிரி, திருப்பத்தூர் 41.6 டிகிரி, திருச்சி 40.7 டிகிரி, திருத்தணி 40.4 டிகிரி, வேலூர் 41.3 டிகிரி என வெப்பம் பதிவானது. சென்னையில் அதிகபட்ச வெப்பம் 39 டிகிரி என பதிவானது.

Similar News

News January 23, 2026

திமுக அரசு ஒரு பூஜ்ஜிய அரசு: அன்புமணி கடும் தாக்கு

image

இன்னும் 2 மாதத்தில் EPS, முதல்வராக பதவியேற்பார் என NDA பொதுக்கூட்டத்தில் அன்புமணி தெரிவித்துள்ளார். பல்வேறு முறைகேடுகளை சுட்டிக்காட்டி, திமுகவை கடுமையாக தாக்கிய அன்புமணி, ஊழல் என்றாலே அதற்கு மறுபெயர் திமுகதான் என்று சாடினார். CM ஸ்டாலின் எப்போது வாய் திறந்தாலும் பொய் மட்டுமே பேசுவதாக விமர்சித்த அவர், திமுக அரசு ஒரு பூஜ்ஜிய அரசு. அதனை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

News January 23, 2026

அதிமுகவுக்காக கவலைப்பட்ட கனிமொழி

image

அதிமுக தங்களுக்கு உடன்பாடு இல்லாதவர்களுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினால் எப்படி வெற்றி பெற முடியும் என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக என்ற கட்சி இன்னும் கொஞ்சம் நாளாவது பத்திரமாக இருக்க வேண்டும் என்ற அவர், திமுகவின் கவலையும் அதுவாகத்தான் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், தேர்தல் வருவதால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார் என விமர்சித்துள்ளார்.

News January 23, 2026

டிகிரி போதும்.. வங்கியில் ₹32,000 சம்பளம்!

image

தேசிய விவசாய & கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 Development Assistant காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 35 வரை *கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி *தேர்ச்சி முறை: முதல்நிலை, முதன்மை & மொழித் திறன் தேர்வுகள் நடைபெறும் *சம்பளம்: ₹32,000 வரை *பிப்ரவரி 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் *வேலை தேடும் நண்பர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!