News August 16, 2025
CM ஸ்டாலின் வருகை சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு வருகை தந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பேச உள்ளார். முதலமைச்சர் வருகைக்காக 10 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் இருபுறங்களும் கொடிகள் நடப்பட்டு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 17, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்- மங்களூரு சென்ட்ரல் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் நாளை (ஆக.17) கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது. எனினும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.
News August 17, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் வங்கி தொடர்பான மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாருக்கும் OTP, PIN எண், CVV மற்றும் கார்டு எண்ணை எந்தச் சூழலிலும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் இத்தகவல்களை ஒருபோதும் கேட்காது. வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள். ஆன்லைன் நிதி மோசடிகள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
News August 17, 2025
சேலத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்!

“சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக ஒரு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும்; முத்தரசன் வைத்த கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியுமா?” என சேலம் மாநகர், நேரு கலையரங்கத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.