News August 16, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

கேள்விகள்:
1. இந்தியாவில் எந்த மாநிலம் ‘மசாலாப் பொருள்களின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது?
2. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு?
3. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது?
4. மியான்மர் நாட்டின் பழைய பெயர்?
5. எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல் அது என்ன?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.
Similar News
News March 20, 2026
விண்வெளியில் 129 இஸ்ரோ கழிவுகள்

இஸ்ரோ மூலம் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மற்றும் செயலிழந்த செயற்கைக்கோள்களின் 129 கழிவுகள் விண்வெளியில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவற்றில் 49 பயனற்ற செயற்கைக்கோள்கள், 40 PSLV துண்டுகள், 4 GSLV துண்டுகள், 3 LVM3 சிதைவுகள், PSLV-C3 ராக்கெட் பாகம் உடைந்ததால் உருவான 33 துண்டுகள் ஆகியவை அடங்கும்.
News March 20, 2026
‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. தேர்தல் அதிகாரியின் அப்டேட்!

ஆட்சேபனை காட்சிகள் அதிகம் இருந்தால் ‘ஜன நாயகன்’ வெளியீட்டை ஒத்திவைக்க முடியும் என Ex தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி தெரிவித்துள்ளார். அவசியப்பட்டால் பட காட்சிகளை நீக்கலாம் என்று கூறிய அவர், படத்தில் உள்ள கருத்தை பொறுத்தே அதனை முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். படத்தின் மறு ஆய்வு முடிவடைந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு படம் அனுப்பப்பட்டுள்ளது.
News March 20, 2026
மகளிர் உரிமை தொகை ₹1,500.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, 10 முக்கிய வாக்குறுதிகளை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ₹1,000-ஆக உள்ள மகளிர் உரிமைத் தொகை பொதுப்பிரிவு மகளிருக்கு ₹1,500 ஆகவும், SC/ST பிரிவு மகளிருக்கு ₹1,700 ஆகவும் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல, வேலைதேடும் இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ₹1,500 தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.


