News August 16, 2025
கள்ளக்குறிச்சியில் ஆடி கிருத்திகைக்கு இதை செய்யுங்க!

ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் கள்ளக்குறிச்சி கோட்டைமேடுவில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலை சுயம்புவாக தோன்றியது என நம்பப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் கர்ம வினைகள் நீங்கும், செவ்வாய் தோஷம் அகலும், திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 16, 2025
கள்ளக்குறிச்சி: கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

மணலூர்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சடைகட்டி பாபா கோயில் அருகே வேட்டவலம் பகுதியை சேர்ந்த முகமது பாஷா என்பவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக இன்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் சலாம் உசேன் மற்றும் போலீசார் மேற்படி சம்பவ இடம் சென்று இந்த நபரிடம் கஞ்சா மற்றும் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த எடை மெஷின் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 16, 2025
கள்ளக்குறிச்சி: வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி: உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா…? (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News August 16, 2025
கள்ளக்குறிச்சி: மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி

திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் வரலாற்று மன்ற மாணவிகள் 60 பேருக்கு, கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து, முறையாக படியெடுப்பது எவ்வாறு என்றும், பாதுகாப்பது எப்படி என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அதன் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான சிங்கார உதயன் பயிற்சியை மேற்கொண்டார்.