News August 16, 2025
BREAKING: ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அதிகாலையில் இருந்து ED அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், MLA விடுதி, திண்டுக்கலில் உள்ள இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும், அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் ED விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
Similar News
News April 4, 2026
ராசி பலன்கள் (04.04.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News April 4, 2026
எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க முன்வந்த ரஷ்யா

இந்தியாவின் எரிசக்தி நெருக்கடியை தீர்க்க ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளது. ரஷ்ய துணைப் பிரதமர் மந்த்ரோவ், தனது இந்திய பயணத்தின் போது PM மோடி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்து ஆலோசித்தார். கச்சா எண்ணெய் மற்றும் LNG விநியோகத்தை அதிகரிக்க தயாராக இருப்பதாகவும், அதற்கான திறன் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.
News April 4, 2026
வங்கிக் கணக்கில் மேலும் ₹5,000.. வந்தது HAPPY NEWS

கெளரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியத்தை ₹25,000-லிருந்து ₹30,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதற்கான நிதியை கல்லூரி கல்வி இயக்ககம் விடுவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் முதல் கெளரவ விரிவுரையாளர்களின் வங்கிக் கணக்கில் உயர்த்தப்பட்ட சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. முன்னதாக, ஜூன் மாதம்தான் ₹30,000 வரவு வைக்கப்படும் என தகவல் பரவிய நிலையில், இந்த திருப்பம் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


