News August 16, 2025
பெரம்பலூர்: வேளாண்மை உதவி இயக்குநர் எச்சரிக்கை

வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் நேற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ள டி.ஏ.பி மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை ஆய்வு செய்தார். அப்போது அவர், “உரங்களை மூட்டையில் உள்ள விலைக்கு மேல் அதிகமாக விற்றால் மற்றும் விற்பனை செய்யும்போது அத்துடன் இணைப்பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தினால் விற்பனை உரிமம் ரத்து செய்து, நீதிமன்ற வழக்கு தொடரப்படும். என்று எச்சரித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
பெரம்பலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
பெரம்பலூர்: தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு எவ்வாறு பணியில் ஈடுபட வேண்டும், எவ்வாறு விரைவாக செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
News March 3, 2026
பெரம்பலூர்: 69 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பொதுத்தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 36 தேர்வு மையங்களில் 82 பள்ளிகளைச் சேர்ந்த 7,276 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 7207 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 69 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


