News August 16, 2025
தூத்துக்குடி: SC & ST இளைஞர்களுக்கு குட் நியூஸ்

தூத்துக்குடி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு 3 மாத இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்படும். 18-30 வயதுடைய இளைஞர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். *இதை ஷேர் செய்து உதவுங்கள்*
Similar News
News March 13, 2026
தூத்துக்குடி: டிகிரி போதும்; ரூ.65,000 சம்பளத்தில் BANK வேலை.!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <
News March 13, 2026
தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதியதில் இளைஞர் பலி.!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த யுவராஜா (32). கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் கோவில்பட்டி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி லாரி அவரது பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 13, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்


