News August 16, 2025
திருவள்ளூரில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பதிவு அவசியம். <
Similar News
News March 7, 2026
பள்ளிப்பட்டு: மது போதையில் நண்பனை கொன்றவர் கைது

திருவள்ளூர்: பள்ளிப்பட்டை சேர்ந்த மகேஷ்பாபு மற்றும் பிரகாஷ், நண்பர்கள். பிரகாஷுக்கு, கடந்தாண்டு ரூ.10,000 மகேஷ்பாபு கடனாக கொடுத்திருந்தார். நேற்று(மார்ச் 6) காலை இருவரும், பாழடைந்த தனியார் பள்ளி வளாகத்தில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மகேஷ்பாபு, மீண்டும் பிரகாஷிடம் பணம் கேட்டுள்ளார். மதுபாட்டிலை உடைத்து, மகேஷ்பாபுவின் கழுத்தில் குத்தியுள்ளார். தகவலறிந்த போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.
News March 7, 2026
திருவள்ளூர்: போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு

எண்ணுாரைச் சேர்ந்த ராஜா(52). இவர், 2019ஆம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, உறவினர் வீட்டின் மாடியில் துணி எடுக்க வந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். தகவலறிந்த எண்ணுார் மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
News March 7, 2026
திருவள்ளூரில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


