News August 16, 2025
கால்களை வலுவாக்கும் உட்கட்டாசனம்!

✦கால்களை பலப்படுத்தவும், மூச்சுக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகிறது.
➥பாதங்களை அருகருகே வைத்து, நேராக நிற்கவும். மூச்சை உள்ளிழுத்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும்.
➥கைகளை உயர்த்தும் போது, இடுப்பை Chair போன்ற நிலைக்கு, கீழே இறக்கவும்.
➥இந்த நிலையில் 20 விநாடிகள் இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும்.
Similar News
News March 11, 2026
ஈரோடு: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் சேர்ந்த சின்னத்தம்பி (58), அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்திலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். கடந்த 25 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த இவர், ஓபிஎஸ் அணிக்குச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பிய அவருக்கு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
News March 11, 2026
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் விறகு விலை

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் விறகு அடுப்பில் சமைப்பதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், விறகு விலையும் டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 1 டன் விற்கப்பட்ட விறகு, தற்போது 10 டன் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால், விறகு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். உங்க பகுதியில் எப்படி?
News March 11, 2026
CSK-வில் ரெய்னா? அணியின் CEO அப்டேட்

ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், CSK-வின் பேட்டிங் அல்லது பீல்டிங் பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என தகவல் கசிந்தது. ஆனால், இது ஒரு வதந்தி என மறுத்துள்ள அணியின் CEO காசி விஸ்வநாதன், பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவில்லை என கூறியுள்ளார். CSK-வில் இணைய ரெய்னா விருப்பம் தெரிவித்தும், அவரை அணி நிர்வாகம் சேர்க்காததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.


