News August 16, 2025
கிருஷ்ண ஜெயந்தியில் இந்த தவறுகளை பண்ணிடாதீங்க!

★வெங்காயம், பூண்டு, மது, உள்ளிட்ட தாமச உணவுகளை கண்டிப்பாக கிருஷ்ண ஜெயந்தி அன்று தவிர்க்க வேண்டும்.
★அன்பையும், ஒற்றுமையையும் வளருங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.
★கிருஷ்ணர் நள்ளிரவில் தான் பிறந்தார் என்பதால், அந்த சமயத்தில் தூங்காமல், கண்ணனை வழிபட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு கண்டிப்பாக கருப்பு நிற பொருள்களை அர்ப்பணிக்க கூடாது.
★துளசி இலையை பறிக்கக் கூடாது.
Similar News
News August 17, 2025
SK-ன் அப்பாவாக 90’ஸ் டாப் ஹீரோ?

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘மதராஸி’. அதைத்தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் ‘பராசக்தி’
படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் 90-களின் சாக்லேட் பாய் ஹீரோவான அப்பாஸ், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்து வருகிறாராம். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
News August 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 430 ▶குறள்: அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். ▶ பொருள்: அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை. அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.
News August 17, 2025
TVK 2-வது மாநாடு: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தவெக-வின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநாடு நடைபெறும் இடத்தில் குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்தம் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவசர மருத்துவ வசதிக்காக டிரோன் மூலம் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை என்.ஆனந்த் நேரில் பார்வையிட்டார்.