News August 16, 2025
ஆகஸ்ட் 16: வரலாற்றில் இன்று

*1946 – கொல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 3 நாட்களில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
*1968 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதை பிரெஞ்சு அரசு அதிகாரபூர்வமாக ஏற்ற தினம்.
*2006 – இயற்கை வேளாண் தந்தை மசனோபு ஃபுக்குவோக்கா மறைந்தநாள்.
*2018 – முன்னாள் PM வாஜ்பாயின் மறைந்தநாள்.
*1954 – டைட்டானிக், அவதார் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் பிறந்தநாள்.
Similar News
News August 16, 2025
GOOD NEWS: பெற்றோர்களே, இதை கவனிங்க!

வீடுகள், பள்ளிகளுக்கு வெளியே இயற்கை சூழல்களில் குழந்தைகள் விளையாடுவது, அவர்களின் உடல் மற்றும் மனநலத்துக்கு பெரும் நன்மை செய்வதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை., விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். `வெளியே’ என்பது கட்டடத்துக்கு வெளியே என்பதல்ல, மரம், செடிகள் மற்றும் இயற்கை தன்மை மிகுந்த இடங்களாக இருக்க வேண்டும் என்கின்றனர். எப்போதும் ஸ்மார்ட்போனுடன் தலை கவிழ்ந்திருக்கும் நம் குழந்தைகளின் நிலை?
News August 16, 2025
10 விநாடி விளம்பரத்திற்கு ₹16 லட்சம்

2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்., 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளின்போது வரும் விளம்பரங்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக IND vs PAK மோதும் போட்டிகளின்போது, 10 விநாடி விளம்பரங்களுக்கு ₹14 முதல் ₹16 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவி, டிஜிட்டல் என இந்த தொடரின் முழு ஒளிபரப்பு உரிமமும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வசம் உள்ளது.
News August 16, 2025
போர்களின்போது பாலியல் துன்புறுத்தல்கள் 25% அதிகரிப்பு

மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதற்கு இந்த அறிக்கையே சாட்சி. கடந்த ஆண்டில் நடைபெற்ற போர்கள் & உள்நாட்டு மோதல்களின்போது சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் 25% அதிகரித்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. இதில் 63 அரசு & NGO அமைப்புகளுக்கு தொடர்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடுமைகள் காங்கோ, சோமாலியா, தெற்கு சூடான், ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் அரங்கேறியுள்ளன.