News August 16, 2025
ரத்தன் டாடாவின் பொன்மொழிகள்

*நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு சரியானதாக மாற்றிவிடுவேன்.
* ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.
* நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள்.நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி.
Similar News
News March 3, 2026
திமுகவில் யார் யாருக்கு ராஜ்யசபா சீட்

கூட்டணி முடிவை இன்றுக்குள் அறிவிக்க காங்கிரஸுக்கு திமுக கெடு விதித்துள்ளது. அப்படி அறிவிக்கவில்லை என்றால், இன்றே ராஜ்யசபா வேட்பாளர்களை திமுக அறிவிக்கவுள்ளது. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் காங்கிரஸுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் 3-வது வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
மீண்டும் எம்பி ஆகிறாரா தம்பிதுரை?

அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக மீண்டும் தம்பிதுரை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா சீட்டுகளில் 2 இடங்கள் அதிமுகவிற்கு கிடைக்கும். இதில் ஒரு ராஜ்யசபா சீட்டை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு (அன்புமணி) கொடுக்கவும், மற்றொன்றில் தம்பிதுரையை களமிறக்கவும் EPS திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 3, 2026
ஈரான் அரசு என்னை கொன்னுடும்.. பயத்தில் நடிகை!

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் அரசாங்கம் தன்னை கொன்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கமேனி மரணமடைந்ததை கொண்டாடிய அவர், அந்நாட்டின் அரசு கவிழும் வரை அங்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். ஈரானில் பிறந்த நோரூசி, 8 வயதில் வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் வசித்து வரும் அவர், ‘Sacred Games’ உள்பட பல இந்திய மொழி படங்கள், வெப் தொடர்களில் நடித்துள்ளார்.


