News August 16, 2025
கள்ளக்குறிச்சில்: கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

உ.நெமிலியை சேர்ந்த மாரியும், ஆனந்தன் என்பவரும் ஒரே ஊர், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் மாரியின் வீட்டில் உள்ள வேப்பமர கிளை ஆனந்தன் வீட்டின் பக்கம் சென்றதால் ஆனந்தன், பழனிவேல், காசிராஜன், உண்ணாமலை, தமிழ்மணி ஆகியோர் சேர்ந்து அதை வெட்டியுள்ளனர். இதை கேட்ட மாரியை அனைவரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 5 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News August 16, 2025
கள்ளக்குறிச்சி: மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி

திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் வரலாற்று மன்ற மாணவிகள் 60 பேருக்கு, கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து, முறையாக படியெடுப்பது எவ்வாறு என்றும், பாதுகாப்பது எப்படி என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அதன் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான சிங்கார உதயன் பயிற்சியை மேற்கொண்டார்.
News August 16, 2025
கள்ளக்குறிச்சி: 10th போதும்! சூப்பரான அரசு வேலை! நாளையே கடைசி

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News August 16, 2025
கள்ளக்குறிச்சி: செல்போன் தொலைந்தால் கவலை இல்லை!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <