News August 16, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.15) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News August 16, 2025
CM ஸ்டாலின் வருகை சேலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு வருகை தந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பேச உள்ளார். முதலமைச்சர் வருகைக்காக 10 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் இருபுறங்களும் கொடிகள் நடப்பட்டு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News August 16, 2025
சுதந்திர தினத்தன்று 108 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு

சுதந்திர தினத்தன்று முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட நிறுவனங்கள் மீது பண்டிகை விடுமுறைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று தொழிலாளர் துணை ஆய்வாளர் நடத்திய ஆய்வில், 37 கடைகள், 64 உணவு நிறுவனங்கள், 7 மோட்டார் நிறுவனங்கள் என மொத்தம் 108 நிறுவனங்கள் முன் அனுமதி பெறாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
News August 16, 2025
சேலத்தில் அரசு வேலை: ₹76,380 வரை சம்பளம்!

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 148 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<