News August 15, 2025

நெல்லையில் நீச்சல் பயிற்றுநருக்கு அழைப்பு

image

நெல்லையில் கேலோ இந்தியா நீச்சல் மையம், பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இயங்குகிறது. இங்கு 30 வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நீச்சல் பயிற்சியாளர் பணியிடம் காலியாக உள்ளது. 40 வயதுக்குட்பட்ட, தேசிய/சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 கட்டணம், 11 மாதங்களுக்கு வழங்கப்படும். (விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20) *ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 16, 2025

நெல்லையில் 35.100 சம்பளத்தில் அரசு வேலை… APPLY NOW!

image

நெல்லை மாவட்ட மக்களே நமது நெல்லையில் 35,100 சம்பளம் வழங்கும் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப தேதி இன்றுடன் கடைசி (ஆகஸ்ட்.16) எனவே 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நெல்லை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுங்க…. நமது நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் வேலையை MISS பண்ணிடாதீங்க… மற்ற்வர்களுக்கு SHAREபண்ணி ஞாபகபடுத்துங்க…

News August 15, 2025

மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கி அசத்திய ஆசிரியர்

image

வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சமூக அறிவியல் ஆசிரியர் சங்கரநாராயணன் தனது சொந்த செலவில் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து 12ம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க வாழ்த்து தெரிவித்தார்.

News August 15, 2025

நெல்லை இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!