News April 7, 2024
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழையா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News April 18, 2025
கோவிலில் சிலை திருடிய பெண் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூரில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயிலில் வெண்கல மாணிக்கவாசகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜனனி (30) என்பவர் நேற்று (ஏப்ரல்.17) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினார். சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின் பொய்ப்பாக்கம் பகுதியில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
News April 17, 2025
வேலை தேடும் ராணிப்பேட்டை இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க.
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 322 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<