News August 15, 2025

தென்காசி முன்னாள் MLAவின் விரக்தி

image

சங்கரன்கோவில் ex.MLA, முத்து செல்வியின் இன்றைய எக்ஸ் தளப்பதிவு; தொடர்ந்து புறக்கணிக்கும் தென்காசி வடக்கு மாவட்ட கழகத்திற்கு நன்றி; கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கும் எனக்கு அழைப்பு விடுக்காத மாவட்ட கழக நிர்வாகத்திற்கு நன்றி. நீங்கள் என்னை தொடர்ந்து புறக்கணித்தாலும் தலைவர் தளபதியார் வழியில் பயணிப்பேன் பணி செய்வேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 16, 2025

சுதந்திர போராட்ட தியாகிக்கு சால்வை அணிவித்து மரியாதை

image

தென்காசி அரசு பள்ளி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இடைகால் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதிக்கு அரசு சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இதில் எஸ்.பி அரவிந்த், டிஆர்ஓ ஜெயச்சந்திரன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 15, 2025

குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

image

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை ஓரத்தில் நின்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. தற்பொழுது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

தென்காசி : VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தென்காசி மாவட்ட மக்கள் 04633-299544 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!