News August 15, 2025
இந்திய லெஜண்ட்களை சந்திக்கும் ஃபுட்பால் லெஜண்ட்!

ஃபுட் பால் லெஜண்ட் மெஸ்ஸியின் இந்திய பயணம் உறுதியாகியுள்ளது. வரும் டிச., 12-ல் இந்தியா வரும் அவர் கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், இந்த பயணத்தின் போது சச்சின், தோனி, கோலி, கில், ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்களையும் சந்திக்க உள்ளார். டிச.15-ல் பிரதமரின் இல்லத்தில் வைத்து PM மோடியை சந்திப்பதோடு, அவரது பயணம் நிறைவடைகிறது.
Similar News
News April 4, 2026
சென்னை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <
News April 4, 2026
வெள்ளியை வைத்து கடன் பெறலாம்.. இதை கவனிங்க!

தங்கத்தை போன்று <<19547252>>வெள்ளியையும்<<>> அடமானம் வைத்து கடன் பெறும் திட்டம் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் சிறப்பம்சமாக, தொகையை பொறுத்து நகைக் கடன் மதிப்பு மாறும். ₹2.5 லட்சம் வரை கடன் பெற, வெள்ளியின் மதிப்பில் 85% வரை பணம் கிடைக்கும். ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை கடன் பெற, 80% வரையும், அதற்கு மேல் கடன் பெற விரும்பினால் 75% வரையும் என பணம் கிடைக்கும் என RBI புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
News April 4, 2026
CBSE பாடத்திட்டத்தில் இந்தி திணிப்பா? தர்மேந்திர பிரதான்

CBSE பாடத்திட்டத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக<<19561968>> CM ஸ்டாலின் <<>>குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், திணிப்பு என்பது அவரது அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு முயற்சி என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார். புதிய கல்வி கொள்கை தாய்மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ஆனால் கட்டாய இந்தி திணிப்பு என்று ஸ்டாலின் தவறாக சித்தரிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


