News August 15, 2025
கட்டணத்தை உயர்த்திய SBI

வங்கிக் கணக்கில் இருந்து IMPS டிரான்ஸ்பர் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை உயர்த்துவதாக SBI வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ₹25,000 வரையான தொகைக்கு கட்டணம் இல்லை. ஆனால், ₹25,000 முதல் ₹1,00,000 வரை- ₹2+GST, ₹1,00,000 முதல் ₹2,00,000 வரை- ₹6+GST, ₹2,00,000 முதல் ₹5,00,000 வரை- ₹10+GST கட்டணம் இருக்கும். இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
Similar News
News March 8, 2026
தஞ்சை: பாஜக மையக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக மையக்குழு, ஒன்றிய தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொகுதி களப்பணிகளை ஒருங்கிணைக்கவும் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பாளர் இளங்கோ, பொறுப்பாளர் துரை, பொதுச்செயலாளர் வீரசிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர்.
News March 8, 2026
TN-ல் NDA கூட்டணி ஆட்சி உறுதி: அமித்ஷா

மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் வரும் தேர்தலில் NDA கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என அமித்ஷா தெரிவித்துள்ளார். டேராடூனில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் விரோத அரசுகளை வெளியேற்ற மக்கள் தயாராகி வருவதாக கூறினார். தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என EPS கூறி வரும் நிலையில், அதற்கு முரணாக அமித்ஷா பேசி வருவது பேசுபொருளாகியுள்ளது.
News March 8, 2026
விஜய் மனைவிக்கு திமுகவில் முதல் ஆதரவு வந்தது

விஜய் மனைவி சங்கீதாவுக்கு திமுகவில் இருந்து வெளிப்படையாக ஆதரவு வந்துள்ளது. சங்கீதாவிற்கு அவரது கணவர் வீட்டில் வசிக்கும் உரிமையை சட்டம் தந்திருக்கிறது; காவல்துறையின் உதவியுடன் வீட்டிற்குள் நுழையலாம், அதனை கணவரால் (விஜய்) தடுக்க இயலாது என்று திமுக எம்பியான சல்மா கூறியுள்ளார். விமன் ஹெல்ப்லைன் 181 வழியாக சட்ட உதவி கோர அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.


