News August 15, 2025

அப்பா மன்னித்து விடுங்கள்.. உருக்கமான தற்கொலை கடிதம்

image

அப்பா தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் உங்கள் மீது அவதூறு சுமத்தப்பட்டுள்ளது. நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். ஜார்க்கண்ட் பலாமுவில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் சுஷாந்த்(30) தனது தற்கொலைக்கு முன்பு எழுதிய வரிகளை இவை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மன அழுத்தத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

Similar News

News March 28, 2026

மாவீரன் நெப்போலியன் பொன்மொழிகள்!

image

▶ கற்பனை வளமே இந்த உலகை ஆள்கிறது. ▶காலத்தின் அருமையை புரிந்து கொள்ளாதவர்கள் வெற்றி அடைய முடியாது.
▶முன்னேற்றத்தை நோக்கி அடி எடுத்து வையுங்கள் அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.
▶இழந்த இடத்தை பிடித்துக்கொள்ளலாம், ஆனால் இழந்த காலத்தை ஒருபோதும் பிடிக்க முடியாது.

News March 28, 2026

புதிய அவதாரம் எடுக்கும் அஸ்வின்

image

IPL 2026-ல் அஷ்வின் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறையாக, அவர் ஜியோஸ்டார் குழுவின் சார்பாக வர்ணனையாளர் மைக்கை பிடிக்க இருக்கிறார். இந்தக் குழுவில் சேவாக், டி வில்லியர்ஸ் மற்றும் ரெய்னா போன்றவர்களுடன் அவரும் இணைந்து வர்ணனை செய்ய உள்ளார். அஸ்வின் பந்துவீச்சு போன்ற வார்த்தைகளிலும் ஜாலம் செய்யக்கூடியவர் என்பதால் அவர் வர்ணனையில் தனது முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 28, 2026

விரக்தியாக இருந்தால் இதை செய்யலாம்!

image

நீங்கள் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ உணரும்போது, ​​அதை மற்றவர்கள் மீது காட்டாமல் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, பொருள்களை நேர்த்தியாக அடுக்கி வைப்பது ஆகியற்றை செய்வதன்மூலம் ரிலாக்ஸ் ஆகலாம். இது வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு உங்கள் கோபத்தை போக்கவும் உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

error: Content is protected !!