News August 15, 2025
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு பரிசு வழங்கிய முதல்வர்

இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். பின், தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரமேரூர் பேரூராட்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். இவ்விருதை பேரூராட்சித் தலைவர் சசிகுமார் பெற்றுக்கொண்டார்.
Similar News
News August 15, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் போலீசார் இன்று (15.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*
News August 15, 2025
காஞ்சிபுரம் சிங்கப்பெண்ணுக்கு விருது

பேட்மிண்டன் வீராங்கனையான துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். 2024-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தவர். அன்மையில் இவருக்கு மத்தியஅரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துளசிமதி முருகேசனுக்கு முதல்வர் ஸ்டாலின், கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தார்.
News August 15, 2025
துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது

பேட்மிண்டன் வீராங்கனையான துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். 2024-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தவர். இவருக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலகக் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர திருநாள் விழாவில் துளசிமதி முருகேசனுக்கு, முதல்வர் கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தார்.