News August 15, 2025
புதிய காற்றழுத்தம்.. ஆகஸ்ட் 21 வரை மழை நீடிக்கும்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், ஊத்துக்கோட்டையில் அதிகபட்சமாக தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையிலும் ஒரு வாரம் மழைக்கு வாய்ப்புள்ளதாம். வெளியே செல்லும்போது கவனம் தேவை நண்பர்களே!
Similar News
News March 14, 2026
BREAKING: வீட்டு சிலிண்டர்.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு என்ற செய்திதான் கடந்த 2 நாள்களாக மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சிலிண்டர் தேவை, கையிருப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்கள் அனைவருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
News March 14, 2026
LK சுதீஷ் மீது புகார் அளிக்க ‘ரெரா’ அனுமதி.. புதிய சிக்கல்!

ஒப்பந்தப்படி வீடுகள் வழங்கப்படாத வழக்கில் LK சுதீஷ் மீது புகார்களை பதிவு செய்ய RERA(Real Estate Regulatory Authority) அனுமதி வழங்கியுள்ளது. சுதீஷ், அவரது மனைவி பூர்ணஜோதி இருவரும், மாதவரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகின்றனர். இதில், குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகள் வழங்கவில்லை என பாலதண்டபாணி உள்ளிட்ட 5 பேர் புகார் அளித்துள்ளனர். இது, LK சுதீஷுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
News March 14, 2026
ராஜீவ் காந்தியின் பதவி பறிப்புக்கு இதுவா காரணம்?

திமுக மாணவர் அணிச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி, நேற்று திடீரென்று அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்திற்கு காரணம் வெளிவந்துள்ளது. கோவையில் ஒரு தொகுதியை குறிவைத்து நாய் நகர்த்திய அவர், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருடன் மோதல் போக்கை கடைப்பிடித்ததும், இரவு நேரங்களில் கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு மேசேஜ் அனுப்பியதும் நீக்கத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


