News August 15, 2025

கிருஷ்ண ஜெயந்தியில் எப்படி வழிபட வேண்டும்!

image

★வீட்டின் அனைத்து இடங்களிலும், தீர்த்த பொடியை(பச்சைக் கற்பூரம் & ஏலக்காய்) தெளிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
★அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
★அஷ்டமி அன்று முடிந்த தானத்தை பிறருக்கு செய்யுங்கள்.
★பூஜைக்கு நெய்வேத்தியமாக வெண்ணெய், சர்க்கரை, அவல், முறுக்கு, சீடை, இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பலகாரங்களை படைக்கலாம்.

Similar News

News August 15, 2025

ALERT: இவற்றால் உங்களுக்கு கிட்னி ஸ்டோன் வரலாம்

image

கீழ்க்கண்ட காரணங்களால் சிறுநீரக கற்கள் ஏற்படலாம்: *போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது *அதிக உடல்பருமன் *சிறுநீர்ப்பாதை தொற்று, நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு இருத்தல் *புரதம், சோடியம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகள் *அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த இடங்களில் வசிப்பது *சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும், அதைத் தள்ளிப் போடுவது *சில வகை மருந்துகள். இவற்றை தவிர்த்தாலே கற்களை தடுக்கலாம்.

News August 15, 2025

திமுகவில் இணைகிறாரா அதிமுகவின் தம்பிதுரை?

image

அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், மைத்ரேயன் என அடுத்தடுத்த அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் தம்பிதுரையும் திமுகவில் சேரப் போவதாக, புகழேந்தி குண்டை தூக்கி போட்டுள்ளார். மேலும், பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே தங்கமணி திமுகவில் இணைவதாக செய்தி பரவிய நிலையில், அதனை அவர் மறுத்தார்.

News August 15, 2025

வரலாற்று சாதனை படைத்த ஸ்வேதா மேனன்

image

கேரள நடிகர் சங்கத் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 31 ஆண்டு கால நடிகர் சங்க வரலாற்றில், ஒரு நடிகை தலைவராக வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்களில் நடித்ததாக இவர் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அவர் இடைக்கால தடை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!