News August 15, 2025
மகளிர் உரிமைத்தொகை 24-வது தவணை வந்தது

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 24-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News March 7, 2026
அரசுக்கு கண்டனம் தெரிவித்த MLA

பண்ருட்டி MLA வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக கேரள எல்லைப் பகுதியில், கூடலூர் அருகே தமிழக அரசின் ஒப்புதலின்றி கேரள அரசு ஒருதலைப்பட்சமாக எல்லை அறிவிப்புப் பலகைகளை நட்டுள்ள செய்தி, பேரதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. அண்டை மாநிலங்கள் பேண வேண்டிய கண்ணியத்தையும், ஜனநாயக மரபுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இச்செயலை தவாக வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்தார்.
News March 7, 2026
கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் உயரிய விருது!

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசு ‘பைடி ஜெயராஜ்’ விருது அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான Gaddar Telangana Film Awards சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. அதில், நடிகர் சிரஞ்சீவிக்கு NTR விருதும், நடிகை ரஷ்மிகாவுக்கு சிறந்த நடிகைக்கான(The Girlfriend) விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் கோலோச்சிய பைடி ஜெயராஜ், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர்.
News March 7, 2026
FLASH: மாருதி சுசுகி கார்களின் விலை ₹45,000 வரை குறைந்தது

கார் வாங்க காத்திருப்போருக்கு மாருதி சுசுகி நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முதல் ஆல்டோ கே10 வரை பிரபலமான கார்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகையானது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைவு என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலப்பக்கம் SWIPE செய்து பாருங்க.


