News August 15, 2025
பொதுவிருந்தில் பங்கேற்ற எம்எல்ஏ மற்றும் ஆட்சியர்

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் வளாகத்தில் இன்று பொது விருந்து நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.
Similar News
News March 6, 2026
திருவாரூர்: மகன் கழுத்தை அறுத்து கொன்ற தந்தை!

பேரளம் அருகே உள்ள கடகம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (26). இவர் சம்பவத்தன்று கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து அவரது தந்தை மனோகரன் (54) பேரளம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மனோகரனே தனது மகன் அய்யப்பனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து தற்போது மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 6, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்.5) இரவு 10 மணி முதல் (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 5, 2026
திருவாரூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04366-226767
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️ உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க


