News August 15, 2025
சிறந்த நகராட்சிகளில் 3ம் இடம் பிடித்த பெரம்பலூர்

ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று (15/8/25) சுதந்திர தினத்தை ஒட்டி வழங்கப்படும் சிறந்த மூன்று நகராட்சிகளில் பெரம்பலூர் நகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் இதில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. மூன்றாம் பரிசு பெற்ற பெரம்பலூருக்கு ரூ.10 லட்சம் பரிசாக அளிக்கப்படுகிறது.
Similar News
News September 20, 2025
Breaking: பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்

தவெக தலைவர் விஜய் தற்போது தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரையை தொடங்குவதாக விஜய் அறிவித்த நிலையில் திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள முடிந்தது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு செல்ல முடியாத காரணத்தால் இன்று (செப்.,20) நாகையில் நடந்த பரப்புரையில் விஜய் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
News September 20, 2025
பெரம்பலூர்: 10-ஆம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ஒருவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 30 ஆண்டுகளாக போலி ஆங்கில மருத்துவராக செயல்பட்டு வந்தவரை பெரம்பலூர் போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். அப்போது கைது செய்த அவரிடம் இருந்து மருத்துவம் பார்த்த உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 20, 2025
பெரம்பலூர்: B.E./ B.Tech போதும் ரூ.50,000 சம்பளம்!

பெரம்பலூர் பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <