News August 15, 2025
நடுவானில் விமானத்தில் கோளாறு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று (ஆக.14) 166 பயணிகளுடன் கோழிக்கோடு வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது இதையடுத்து அவசர அவசரமாக விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நள்ளிரவு 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தற்போது விமானத்தின் கோளாறு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை விமானம் கோழிக்கோடு புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Similar News
News March 7, 2026
பட்ஜெட் நிதியில் 30% கொள்ளை – விஜய்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், “தமிழக பட்ஜெட்டுக்கான நிதியில் 30% முதலமைச்சருக்காக ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “காசில்லை காசில்லை என்று கூறிவிட்டு விடியற்காலையில் ரூ.5,000 மக்களுக்கு வழங்கியது எப்படி? ஸ்டாலின் சார் Tax-ஐ ஒழித்தாலே மக்களுக்கு பணத்தை வழங்க முடியும்” என்றார். விஜய்யின் இந்த குற்றசாட்டை நீங்க எப்படி நினைக்கிறீங்க?
News March 7, 2026
தவெக தலைவர் அறிவித்த வாக்குறுதிகள்

▶️திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்
▶️அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம்
▶️மாணாக்கரின் தாய் (அ) பாதுகாவலருக்கு ரூ.15,000
▶️பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்
▶️தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்
▶️பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart panic button
News March 7, 2026
செங்கை: வாக்குறுதிகளை அறிவித்த விஜய்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெக மகளிர் தின விழாவில் மகளிருக்கான சிறப்பு அறிவிப்புகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். 1. அதன்படி மதிப்புமிகு மகளிர் திட்டம் என்ற பெயரில் 60 வயது வரை உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். 2. குடும்பத்திற்கு அண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலசமாக வழங்கப்படும். <<19322190>>தொடர்ச்சி<<>>


