News August 15, 2025
CINEMA ROUNDUP: செப்.5-ம் தேதி வெளியாகும் ‘காந்தி கண்ணாடி’

◆உலக சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘சிசு’ படத்தின் 2-ம் பாகம் வரும் நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
◆நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘Dear Students’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
◆KPY பாலா ஹீரோவாக நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில்தான், SK-ன் ‘மதராஸி’ படமும் வெளிவருகிறது.
Similar News
News April 1, 2026
விஜய் என்ற ஒற்றை முகம் மாற்றத்தை ஏற்படுத்தும்: ஸ்ரீநாத்

தூத்துக்குடியில் தவெகவால் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும் என விஜய்யின் நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி வேட்பாளருமான ஸ்ரீநாத் கூறியுள்ளார். தவெக கூட்டத்தில் பாட்டில்கள் வீசப்பட்டது குறித்து பேசிய அவர், இது அநாகரிகமான செயல் என விமர்சித்துள்ளார். TN-ல் விஜய் என்ற ஒற்றை முகம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், அதற்காக விஜய் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
News April 1, 2026
ஈரான் மீது 16,000 குண்டுகளை வீசினோம்: இஸ்ரேல்

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது 16,000 குண்டுகளை வீசியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 4,000 இலக்குகள் மீது 10,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், ராணுவ தலைமையகங்கள், அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் & தளபதிகளை கொன்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
News April 1, 2026
மணிப்பூர் கவர்னருக்கு தவெக கடிதம்.. ஒரே Confusion

விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தவெகவின் <<19535710>>CT<<>>R நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், அக்கடிதம் மணிப்பூர் கவர்னர் அஜய் பல்லாவுக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது. 2024 ஆகஸ்டிலேயே அஜய் பல்லா உள்துறை செயலர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, தற்போது கோவிந்த் மோகன் அந்த பதவியில் உள்ளார். பதவியில் இல்லாத ஒருவருக்கு கடிதம் அனுப்பியது பேசுபொருளாகியுள்ளது.


