News August 15, 2025
சேலம்: இலவச கண் சிகிச்சை முகாம்

அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க இணைந்த்து நடத்தும், இலவச கண் சிகிச்சை முகாம் வரும் ஆக.17ஆம் தேதி அம்மாப்பேட்டையில் எஸ்.பழனியாண்டி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது. காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். மேலும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, போன் நம்பர் போன்ற ஆவணங்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
சேலம்: உதவியாளர் வேலை.. ரூ.96,000 சம்பளம்!

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 16 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 15, 2025
சேலத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மாலை சேலம் வருகிறார். இதன் காரணமாக, சேலம் மாநகரப் பகுதிகளில் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
News August 15, 2025
சேலம்: 100 கிலோ உப்பால் தேசிய கோடி!

எடப்பாடி பேருந்து நிலையத்தில் நமது நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 100 கிலோ உப்பால் நமது நாட்டின் வரைபடத்தை வரைந்து நம்ம அறக்கட்டளை மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மேலும் இதில் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் ஆகிய மதம் மூவர்ணங்களில் வரையப்பட்டுள்ளது. முப்பால் வரையப்பட்டுள்ள இந்திய வரைப்படத்தை ஆர்வத்துடன் பொதுமக்கள் ரசித்து வருகின்றனர்.