News August 15, 2025
தூத்துக்குடி: பிளாஸ்டிக் இல்லா உணவகங்களுக்கு விருது

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கை பயன்படுத்தாத பெரிய உணவகங்களுக்கு ரூ.1,00,000/- பரிசுடன் விருது வழங்கப்படும் என ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்தார். தெருவோர மற்றும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000/- உடன் விருது வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். *ஷேர்*
Similar News
News August 15, 2025
தூத்துக்குடி: கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகை கொள்ளை

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகராக இருந்த குமார் பட்டர், கடந்த மாதம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது மனைவி பிரியா, உறவினர் வீட்டில் தங்கியிருந்து, ஆகஸ்ட் 13 அன்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 107 பவுன் தங்க நகைகள், வெள்ளி, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. குலசேகரபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 15, 2025
தூத்துக்குடி: கணவரால் பிரச்சனையா.! உடனே கூப்பிடுங்க.!

தூத்துக்குடி, நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 0461-2325606 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 15, 2025
தூத்துக்குடியில் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பின்படி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு உலர், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம் வழங்கப்படும். கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை. விண்ணப்பங்கள் மாவட்ட இணையதளத்தில் கிடைக்கும். ஆகஸ்ட் 31 கடைசி தேதி. விண்ணப்பங்களை கோரம்பள்ளம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ, தபாலிலோ சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். *ஷேர்*