News August 15, 2025

நீலகிரி மக்களே இனி அலைய வேண்டாம்!

image

EB கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க..இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News November 13, 2025

நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், நாளை காலை 10 மணி முதல் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் உள்ள, கீழ்த்தர கூட்ட அரங்கில், சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மருத்துவர்கள் மற்றும் முன்னாள் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்க உள்ளனர் என, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

குன்னூரில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

image

குன்னுார் பழைய ஆஸ்பத்திரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், உமாராணி தம்பதி. இவர்கள் கடந்த மாதம், 27ல் அன்னுாரில் உள்ள உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று, 29ல் திரும்பியுள்ளனர். இந்நிலையில், ‘நேற்று வீட்டில் உள்ள நகையை அடமானம் வைக்க, பீரோவில் பார்த்த போது, 31 பவுன் வரை நகைகள் காணவில்லை,’ என, குன்னுார் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2025

காட்டேரி பகுதியில் பூத்துக் குலுங்கும் மலர்கள்!

image

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களில் ஏராளமான சேவல் கொண்டை மலர்கள் பயிரிடப்பட்டுள்ளன. சீசன் காரணமாக இந்த மரங்களில் சிவப்பு நிறத்தில் சேவல் கொண்டை மலர்கள் அடர்த்தியாக பூத்து குலுங்கி வருகின்றன. இதை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

error: Content is protected !!