News August 15, 2025
6 ஆண்டுகளில் 200% உயர்ந்த தங்கம்.. முதலீட்டுக்கு ஏற்றதா?

2019-ல் ₹30,000-க்கு விற்ற 24 கேரட் 10 Gram தங்கம் 200% உயர்ந்து தற்போது ₹1,01,340-யை தொட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 18% உயர்ந்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் போர்கள், கொரோனா காலத்தில் பொருளாதார சரிவு உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் பக்கம் ஈர்த்ததாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளில் ₹2.25 லட்சம் வரை உயரலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உங்கள் கருத்து?
Similar News
News August 15, 2025
2 பைசாவுக்கு டீ.. ஒரு குட்டி டைம் டிராவல்

‘1 பைசா கொடுத்தா பெரிய பொட்டலத்துல கடலை பருப்பு தருவாங்க’ என நமது தாத்தா சொல்லக் கேட்டிருப்போம். இன்றைய சூழலில் ஒவ்வொரு பொருளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு பெருகும் மக்கள்தொகை, ரூபாய் மதிப்பு என பல காரணிகள் உள்ளன. இந்நிலையில், சுதந்திரம் அடைந்த 1947-ல் பொருள்களின் விலையையும், இன்றைய விலையையும் மேலே உள்ள படங்களில் காணலாம். இதை நீங்கள் முதல்முதலாக எவ்வளவு விலைக்கு வாங்கினீர்கள்?
News August 15, 2025
BREAKING: நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்

நடிகை கஸ்தூரி, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான கஸ்தூரி, வலதுசாரி சிந்தனையாளராக தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் மேடைகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், திடீரென அதிகாரப்பூர்வமாக இன்று(ஆக.15) தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார். மேலும், நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.
News August 15, 2025
ரயிலில் இந்த கோடுகளின் அர்த்தம் தெரியுமா?

எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் இருக்கும் இந்த வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகளின் அர்த்தம் தெரியுமா? இதுவும் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கப்பட்டிருப்பவை தான். இந்த கோடுகள் அப்பெட்டியின் வகையை குறிக்கின்றன. வெள்ளை கலர் கோடுகள் இருந்தால், அது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் என அர்த்தம். அதே நேரத்தில், மஞ்சள் கலர் கோடுகள் இருந்தால், அது மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியாகும். SHARE IT.