News August 15, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சுதந்திர தின வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் 79வது சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தேசியக் கொடி, செங்கோட்டை, மற்றும் புறாக்கள் இடம்பெற்ற வாழ்த்து படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. “For People Service” என்ற கோஷத்துடன், காவல்துறை மக்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நிகழ்வு, மக்கள் மற்றும் காவல்துறை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
Similar News
News August 15, 2025
ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் மின் பகிர்மான வட்டம் ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்துக்கான கூட்டம் 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ளது. கூட்டத்தில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன் பெறலாம்
News August 15, 2025
ராணிப்பேட்டை: இலவச AI பயிற்சி, ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்!

ராணிப்பேட்டை மக்களே, AI துறையில் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ, அல்லது டிகிரி முடித்தவர்கள் <
News August 15, 2025
Happy Birthday ராணிப்பேட்டை

தமிழ்நாட்டின் 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் அறிவிக்கப்பட்ட தினம் இன்று. ஆகஸ்ட் 15, 2019 அன்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டையை ஒருங்கிணைந்த வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தார். 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் ராணிப்பேட்டையில் பல்வேறு தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க