News August 15, 2025

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது.

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றும் போது வெடிகுண்டு வெடிக்கும் என நேற்று (ஆக. 14) காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் தொடர்புக் கொண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். தொழிலில் நஷ்டம் அடைந்த விரக்தியில் மது போதையில் இவ்வாறு செய்தது தெரியவந்தது.

Similar News

News August 15, 2025

ஞாயிறு அட்டவணைப்படி இன்று ரயில்கள் இயங்கும்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 15) சென்னை மற்றும் செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படுகின்றன. இதனால், வழக்கமான நாட்களை விட 40% ரயில்கள் குறைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை இதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திர தின நல்வாழ்த்து தெரிவித்த செங்கல்பட்டு காவல்துறை

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் 79வது சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு விழிப்புணர்வு அல்லது எச்சரிக்கை செய்தி பதிவு செய்து வரும் காவல்துறை, சுதந்திர முன்னிட்டு அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. காவல்துறை மக்களின் பாதுகாப்பிலும், நாட்டின் இறையாண்மையைக் காப்பதிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!