News August 15, 2025
அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு தெரியுமா?

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். இப்படியாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளது.
Similar News
News March 5, 2026
அரியலூர்: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News March 5, 2026
அரியலூர்: புகார்களை தெரிவிக்க எண் வெளியீடு

அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், இது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள திருமலைசாமி என்பவரை 9360292682 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News March 5, 2026
அரியலூர்: பாமக கட்சியினர் தேர்தல் பிரச்சாரம்!

ஆண்டிமடம் அடுத்துள்ள குவாகம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) கிழக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் வைத்தி ஆலோசனையின்படி, நேற்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடுக்கூர் அருள், தேவனூர் செல்வராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுகவை கண்டித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.


