News August 15, 2025
Happy Birthday ராணிப்பேட்டை

தமிழ்நாட்டின் 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் அறிவிக்கப்பட்ட தினம் இன்று. ஆகஸ்ட் 15, 2019 அன்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராணிப்பேட்டையை ஒருங்கிணைந்த வேலூரில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவித்தார். 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் ராணிப்பேட்டையில் பல்வேறு தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
Similar News
News March 7, 2026
ராணிப்பேட்டையில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

ராணிப்பேட்டை மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
ராணிப்பேட்டை: 7 சவரன் நகை கொள்ளை

சோளிங்கர் அருகே பரவத்துார் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (45) . இவர் கடந்த மார்ச் 4ம் தேதி அவசர தேவைக்காக பையில் 7 சவரன் நகை மற்றும் ₹13,000 பணத்துடன், பாராஞ்சியில் உள்ள தனியார் வங்கிக்கு அடகு வைக்க நடந்து சென்றுகொண்டிருந்தார் . அப்போது, கோகிலாவை பின் தொடர்ந்து, டூ வீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு அவரது பையை பறித்து சென்றனர்.இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 7, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


