News August 15, 2025
மக்களாட்சி நிலைக்க உறுதியேற்போம்: EPS

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு EPS தனது வாழ்த்துகளை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச் செம்மல்களை, போற்றி வணங்கி நினைவுகூர்வதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி அகற்றப்பட்டு, முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திட, நல்லாட்சி அமைத்திட உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 5, 2026
தங்கம் விலை ₹5,240 குறைந்தது

போர் சூழலுக்கு நடுவிலும் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,240 குறைந்துள்ளது. மார்ச் 1-ல் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹1,20,960-ஆக சரிந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹35,000 சரிந்து ₹2.95 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News March 5, 2026
கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை திமுக தேர்வு செய்தது எப்படி?

திமுகவின் பேச்சாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ராஜ்யசபா வேட்பாளராக தேர்வானது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. எனினும் அவர் தேர்வானதற்கு கிறிஸ்துவ மீனவ சமூகத்தை சார்ந்தவர் என்பது முக்கிய காரணமாம். விஜய்யின் அரசியல் வருகை மீனவ சமூக மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படும் நிலையில், அம்மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
News March 5, 2026
நாளை சனிப் பெயர்ச்சி.. 4 ராசிக்கு எச்சரிக்கை

சனி பகவான் நாளை (மார்ச் 6) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 4 ராசியினருக்கு சிக்கல் ஏற்படுமாம். *மீனம்: தேவையற்ற அலைச்சல், மன உளைச்சல், வேலைப் பளு ஏற்படலாம். *மேஷம்: பண பரிமாற்றம் செய்யும்போது எச்சரிக்கை தேவை, நிதி இழப்பு நேரிடலாம். *கும்பம்: குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வர வாய்ப்பு. *சிம்மம்: எடுத்த காரியத்தில் தடை, தாமதம் ஏற்படும். கோர்ட் வழக்குகளை சந்திக்கக் கூடும்.


