News August 15, 2025
சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள RBI சுரங்கப்பாதை வரையிலான சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் கார்னர் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக பாரிஸ் கார்னரை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News August 15, 2025
FLASH: சென்னையில் 50 அடி உயரத்திலிருந்து விழுந்தவர் பலி!

சென்னை அருகே உள்ள செம்மஞ்சேரியில் மெட்ரோ ரயில் பணியின் போது இன்று (ஆகஸ்ட் 15) ராட்சத கிரேனில் கான்கிரீட் பாக்ஸ் இணைப்பை தூக்கி சென்றுள்ளனர். அப்போது கிரேனின் கம்பி அறுத்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்த ஜார்கண்டை சேர்ந்த பிக்கிகுமார் பஸ்வான் (23) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயமடைந்த சந்தோஷ் லோரா (23) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் இலவசமாக AI பயிற்சி; ரூ.4.5 லட்சம் சம்பளம்

சென்னை மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், AI ஆராய்ச்சி அசோசியேட் ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெற வாய்ப்புள்ளது. விருப்பமுள்ளவர்கள் <